மேஷம்: புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். பழைய நண்பர்கள் உங்களைத் தேடி வருவார்கள். தாயாரால் மருத்துவச் செலவுகள் குறையும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் வீண் விவாதங்கள் வேண்டாம்.
ரிஷபம்: வெளியூர் தொடர்புகள் விரிவடையும். குடும்பத்தில் குழப்பம் நீங்கும். ஆன்மிகம் அதிகரிக்கும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் அடைவீர்கள். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும்.
மிதுனம்: பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பரம்பரை சொத்து பிரச்னையை விவாதத்தின் மூலம் தீர்த்து வைப்பீர்கள். உங்கள் மூத்த சகோதரர் உதவுவார். உத்தியோகத்தில் விமர்சனங்களை சமாளித்து முன்னேறுவீர்கள். வியாபாரத்தில் சுபிட்சம் உண்டாகும்.
கடகம்: அருமையாகப் பேசி சுற்றியுள்ளவர்களைக் கவர்வீர்கள். பிரபலங்களால் ஆதாயம் உண்டாகும். உங்கள் பிள்ளைகளின் ஆரோக்கியம் மேம்படும். தொழிலை விரிவுபடுத்துவீர்கள். அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த முக்கியமான ஆவணம் கிடைக்கும்.
சிம்மம்: சொத்து வாங்குவது விற்பதில் தடைகள் ஏற்படும். யாரிடமும் தேவையற்ற வாக்குறுதிகளை வழங்க வேண்டாம். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் எச்சரிக்கை தேவை.
கன்னி: முனைப்புடன் செயல்பட்டு முக்கியப் பணிகளை முடிப்பீர்கள். சொந்த ஊரிலிருந்து நல்ல செய்தி வந்து சேரும். வியாபாரத்தில் நிலுவையில் இருந்த கடன்கள் வந்து சேரும். பணியிடத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி நிம்மதி அடைவீர்கள்.
துலாம்: குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். தந்தை வழியில் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். வியாபாரம் செழிக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகள் ஆலோசனை செய்து சில முடிவுகளை எடுப்பார்கள்.
விருச்சிகம்: எதிர்பார்த்தபடி சில பணிகளை முடிப்பீர்கள். மனைவிக்கு அடிபணிவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். பணியிடத்தில் சக ஊழியர்களுடன் இணக்கமாக செயல்படவும்.
தனுசு: உங்களைச் சுற்றியுள்ளவர்களில் நல்லவர்களைக் காண்பீர்கள். எடுத்த காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். பணியிடத்தில் மேலதிகாரிகளுடன் இருந்து வந்த பனிப்போர் முடிவுக்கு வரும்.
மகரம்: எளிதில் செய்ய வேண்டிய காரியங்கள் கூட தாமதமாகும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் பிரச்சனைகள் வரலாம். உங்கள் துணையிடம் வெறுப்பு கொள்ளாதீர்கள். உங்கள் தொழில் வெற்றிகரமாக அமையும்.
கும்பம்: தைரியமாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உங்கள் பிள்ளைகள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் உங்கள் மதிப்பு உயரும். வியாபாரத்தில் உங்கள் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர்கள்.
மீனம்: விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். கடவுள் பக்தி அதிகரிக்கும். வியாபாரத்தில் இருந்த போட்டி மறையும். அலுவலகத்தில் மேலதிகாரிகள் உறுதுணையாக இருப்பார்கள். யாரைப் பற்றியும் குறை சொல்லாதீர்கள்.