சென்னை: நடிகர் தனுஷ் நடித்துள்ள கர படம் ப்ரீ புக்கிங்கில் மட்டுமே ரூ. 3 கோடி வரை வசூல் செய்துள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
தனுஷ் – விக்னேஷ் ராஜா கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் கர. இப்படத்தில் மமிதா பைஜு கதாநாயகியாக நடிக்க கே.எஸ். ரவிக்குமார், ஜெயராம், சுராஜ், கருணாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். அதன்படி, இப்படம் ப்ரீ புக்கிங்கில் மட்டுமே ரூ. 3 கோடி வரை வசூல் செய்துள்ளது. முதல் நாள் உலகளவில் இப்படம் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.