நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிக்கான தகுதிச்சுற்றில் இந்திய வீரர் சுமித் நாகல் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் வரும் 30-ம் தேதி தொடங்குகிறது. இதற்கான தகுதிச்சுற்று போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
தகுதிச்சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சுமித் நாகல், பிரான்ஸ் வீரர் ஆர்தர் கீயை எதிர்கொண்டார். இதில் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய ஆர்தர் கீ, 6-3, 7-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
இதன்மூலம் சுமித் நாகலின் அமெரிக்க ஓபன் பிரதான சுற்றுக்கான வாய்ப்பு முடிவுக்கு வந்தது.
இதனிடையே கலப்பு இரட்டையர் பிரிவில் செர்பிய நட்சத்திர வீரர் நோவக் ஜோகோவிச், பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்காவுடன் இணைந்து விளையாடினார்.
முதல் சுற்றில் செக் குடியரசின் கேத்தரினா சினியகோவா மற்றும் இங்கிலாந்தின் ஹென்றி பேட்டன் ஜோடியை எதிர்கொண்ட ஜோகோவிச்–சபலென்கா ஜோடி 4-1, 2-4, (2-10) என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறியது.
