இத்தாலி: இத்தாலியில் நடைபெற்று வரும் கோபா இத்தாலியா கால்பந்து தொடரில் காக்லியாரி கால்சியோ அணிக்காக இடம்பெற்றுள்ள 20 வயது பிரான்ஸ் வீரர் யேல் டிரெப்பி, நீச்சல் குளத்தில் மூழ்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சர்டினியா பகுதியில் உள்ள ஓட்டலில் தங்கியிருந்த அவர், அங்குள்ள நீச்சல் குளத்தில் குளித்தபோது எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கினார். ஓட்டல் ஊழியர்கள் அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
உடல்நிலை மோசமடைந்ததால் ஹெலிகாப்டர் மூலம் மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவர், தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
