மதுரை: 10-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் முதல் கட்ட லீக் போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், புள்ளிப்பட்டியலில் மதுரை பாந்தர்ஸ் அணி முதலிடத்தில் உள்ளது.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திருப்பூர் தமிழன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. திருச்சி கிராண்ட் சோழாஸ் 5-வது இடத்திலும், கோவை கிங்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன. சேலம் ஸ்பார்ட்டன்ஸ் கடைசி இடத்தில் உள்ளது.
இரண்டாம் கட்ட போட்டிகள் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று தொடங்குகின்றன. இந்நிலையில் இன்று நடைபெறும் 21-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் கோவை கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
