சென்னை: தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தவறானவை என சென்னை உயர்நீதிமன்றத்தில் முதலமைச்சர் விஜய் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் விஜய்யின் தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்கில், அவருடைய தரப்பு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
அதில், தேர்தல் பிரச்சாரத்துக்கு குழந்தைகளை பயன்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தேர்தல் வெற்றியை செல்லாது என அறிவிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தேர்தல் செலவு கணக்குகள் தொடர்பாகவும், வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி பெற்றதை மறைத்ததாக கூறப்படும் புகார்களுக்கும் போதிய ஆதாரங்கள் இல்லை என முதலமைச்சர் தரப்பு தெரிவித்துள்ளது.
வழிபாட்டுத் தலங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகளும் ஆதாரமற்றவை என்றும் பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களையும் சென்னை உயர்நீதிமன்றம் தொடர்ந்து பரிசீலித்து வருகிறது.
