ஹைதராபாத் : மோசமான வானிலை காரணமாக வீரர்களை அனுப்பி வைக்கும் விண்வெளி பயணம் தள்ளிப் போகிறது என இஸ்ரோ அறிவித்துள்ளது.
மோசமான வானிலை காரணமாக சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு வீரர்களை அனுப்பி வைப்பது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து நேற்று மாலை ஆக்சியம்-4 விண்வெளி ஓடும் விண்ணுக்கு செல்ல தயாராக இருந்தது.
நாசா – இஸ்ரோ கூட்டணியில் இந்திய விண்வெளி வீரரும் இதில் இடம் பெற்றுள்ளார். இந்நிலையில், மோசமான வானிலை காரணமாக ஏவுதல் பணி நாளை ஜூன் 11-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.