எண்ணற்ற பயன்களைக் கொண்ட பனை மரத்திலிருந்து பெறப்படும் பதனியை பதப்படுத்துவதன் மூலம் பனக்கற்கண்டு பெறப்படுகிறது.
இதில் அபரிமிதமான மருத்துவப் பயன்கள் உள்ளன. *இதில் கால்சியம், இரும்புச்சத்து, சாம்பல் சத்து, புரதச்சத்து, துத்தநாகம், பொட்டாசியம் போன்ற மல்டி வைட்டமின்கள் உள்ளன.
*பாலில் பனக்கற்கண்டு சேர்த்து குடித்துவர நெஞ்சு சளி நீங்கும்.
* பனக்கற்கண்டை சுவைத்து உமிழ்நீரை மெல்ல விழுங்கினால் வாய் துர்நாற்றம், தொண்டை வலி, வலி நீங்கும்.
* உடல் உஷ்ணம், நீர்ச்சுருக்கம், காய்ச்சலால் ஏற்படும் உஷ்ணம் இவைகளுக்கு நல்லது.
* இதில் உள்ள குளுக்கோஸ், மெலிந்து தேய்ந்து போன குழந்தைகளின் உடலை மீட்டு நல்ல புஷ்டியை தரும்.
* மலச்சிக்கல், வயிற்றுப்புண் போன்றவற்றைக் குணப்படுத்தி, கர்ப்பிணிகள் மற்றும் பிரசவமான பெண்களுக்கு ஆரோக்கியத்தைத் தரும்.
*இதை பானமாக அருந்தினால் இதய நோய் குணமாகும். இதயம் வலுவடையும். *இதில் உள்ள கால்சியம் பற்களை பலப்படுத்துகிறது, ஈறுகளில் ரத்தம் கசிவதை தடுக்கிறது மற்றும் பற்களின் பழுப்பு நிறத்தையும் மாற்றுகிறது.
*ஒரு டீஸ்பூன் சின்ன வெங்காயச் சாறுடன் பனங்கற்கண்டு கலந்து சாப்பிட்டால் சிறுநீரகக் கோளாறுகள் முற்றிலும் குணமாகும்.
* கோடை வெயிலைத் தவிர்க்க பனங்கற்கண்டு, ஏலக்காய் சேர்த்து இளநீர் அருந்துவது சிறப்பு.