வல்லம், பிப்.4- தஞ்சாவூர் அருகே வல்லத்தில் பேரறிஞர் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு அமைதி ஊர்வலம் நடந்தது.
தஞ்சாவூர் அருகே வல்லத்தில் திமுக மத்திய மாவட்டம் கிழக்கு ஒன்றியம் சார்பில் பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு பேருந்து நிலையத்திலிருந்து அண்ணா சிலை வரை அமைதி ஊர்வலம் நடந்தது. பின்னர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் ஒன்றிய செயலாளர்கள் அருளானந்தம், சோமு. செல்வகுமார், வல்லம் பேரூர் செயலாளர் டிகேஎஸ்ஜி.கல்யாணசுந்தரம், அவை தலைவர் மாணிக்கம் மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.