மதுரை: நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக்கழகம் வரவால் தி.மு.க. கூட்டணியில் எந்த சலசலப்பும் இல்லை என்று சிபிஎம். மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
விஜய்யின் வருகை மற்றும் அவரின் அறிவிப்புகள் திமுக கூட்டணியில் எந்த சலசலப்பையும் ஏற்படுத்தவில்லை என சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மதுரை முனிச்சாலை சிமெண்ட் ரோடு பகுதியில் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்த பிறகு செய்தியாளரை சந்தித்த பாலகிருஷ்ணன் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என விஜய் பேசியது, பதவிக்காக ஓடி வருவார்கள் என அரசியல் கட்சிகளை இழிவுபடுத்துவதுபோல் உள்ளதாக தெரிவித்தார்.