ஆன்லைன் ஷாப்பிங்கின் போது வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய அமேசான், இந்தியன் சைபர் கிரைம் கோ-ஆர்டினேஷன் சென்டருடன் இணைந்து “மோசடி இல்லா செப்டம்பர்” முயற்சியை முன்னெடுத்து வருகிறது. பண்டிகை காலத்தில் அதிகமாக நடைபெறும் ஆன்லைன் மோசடிகளைத் தவிர்க்கும் நோக்கத்துடன் இந்த விழிப்புணர்வு முகாம் நடத்தப்படுகிறது.

மோசடிக்காரர்கள், “உங்கள் அக்கவுண்ட் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது” அல்லது “வெரிஃபிகேஷன் செய்ய வேண்டும்” என்ற பெயரில் போலி மெசேஜ்கள் அனுப்பி தீங்கு விளைவிக்கும் லிங்குகளை கிளிக் செய்ய வற்புறுத்துவார்கள். மேலும், அவசரமாக பேமெண்ட் செய்யும்படி அல்லது கிஃப்ட் கார்டுகளை வாங்கும்படி வற்புறுத்துவதும் பொதுவான மோசடிகளில் ஒன்று.
பாதுகாப்பான ஷாப்பிங்குக்காக, வாடிக்கையாளர்கள் எப்போதும் அமேசான் அதிகாரப்பூர்வ அப்ளிகேஷன் அல்லது வெப்சைட் மூலமாகவே ஆர்டர் செய்ய வேண்டும். தெரியாத மூலங்களில் இருந்து வரும் மெசேஜ்கள், இமெயில்கள், சந்தேகத்திற்குரிய லிங்குகளை பயன்படுத்த வேண்டாம். அமேசான் ஒருபோதும் போன் அல்லது இமெயில் மூலமாக நேரடியாக பேமெண்ட் கேட்காது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சந்தேகத்திற்குரிய மெசேஜ்களை உடனடியாக stop-spoofing@amazon.com-க்கு அனுப்பி புகார் அளிக்கலாம். விழாக்காலத்தில் எச்சரிக்கையுடன் இருந்து இந்த வழிமுறைகளை பின்பற்றுவது, வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான ஆன்லைன் ஷாப்பிங் அனுபவத்தை உறுதி செய்யும்.