சென்னை: தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவரது தந்தை ஜோசப் பிரபு காலமானார்.
தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சமந்தா. இவர் நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டு பின்னர் விவாகரத்து பெற்றார்.
சமீபத்தில் அரிய நோயால் பாதிக்கப்பட்டு தற்போது மீண்டு வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் இவரது தந்தை ஜோசப் பிரபு காலமாகி உள்ளார்.
தனது தந்தை உயிரிழப்பு குறித்து சமந்தா தனது சமூக வலைதளத்தில் உருக்கமான பதிவை பகிர்ந்துள்ளார். அதில், “நாம் மீண்டும் சந்திக்கும் வரை அப்பா.” என குறிப்பிட்டுள்ளார்.