By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    “ஐரோப்பிய ஆயுதங்களே இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தப்படுகின்றன” – ஜெய்சங்கர்
    1 Min Read
    “அமைதி ஒப்பந்தம் இல்லை!” – டிரம்ப் அறிவிப்பை மறுத்த ஈரான்
    1 Min Read
    அமெரிக்க தாக்குதலுக்குப் பதிலடியாக ஹார்முஸ் நீரிணையை மூடியது ஈரான்
    2 Min Read
    அமெரிக்கா – ஈரான் மோதல் தீவிரம்! அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
    1 Min Read
    பிரதமர் மோடிக்கு டிரம்ப் பாராட்டு! “மாபெரும் தலைவர்” என வாழ்த்து
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    பராமரிப்பு பணி எதிரொலி! திருப்பதி – காட்பாடி வழித்தடத்தில் ரெயில்கள் ரத்து
    1 Min Read
    CBSE மறுமதிப்பீட்டு அவகாசம் நீட்டிக்க முடியாது! டெல்லி ஐகோர்ட் அதிரடி
    1 Min Read
    இந்திய மாலுமிகள் பயணிக்கும் கப்பல் மீது மீண்டும் தாக்குதல்! அமெரிக்காவுக்கு இந்தியா கண்டனம்
    1 Min Read
    புற்றுநோய் மருந்துகளின் விலை உயர்வு! மத்திய அரசு ஒப்புதல்
    1 Min Read
    நீட் மறுதேர்வுக்கு கடும் பாதுகாப்பு! விமானப்படை உதவியுடன் வினாத்தாள் விநியோகம்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    “நான் CBI இயக்குநர்!” – கலெக்டர் அலுவலகத்தில் போலி அதிகாரி சிக்கினார்
    1 Min Read
    விளையாட்டு வீரர்களின் போராட்டம் பேசும் ‘அங்கீகாரம்’! ஜூன் 26ல் ரிலீஸ்
    1 Min Read
    RTI-க்கு பதில் மறுத்த டாஸ்மாக்! மதுக்கடை எண்ணிக்கை விவகாரத்தில் சர்ச்சை
    1 Min Read
    கொழுப்பை குறைக்க விரும்புபவர்களுக்கு உதவும் பீட்ரூட் ஜூஸ்
    1 Min Read
    தொப்பையை குறைக்க இந்த பானத்தை செய்து அருந்தி பாருங்கள்!!!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: பெண் தற்கொலை சம்பவத்தில் இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > பெண் தற்கொலை சம்பவத்தில் இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
தமிழகம்

பெண் தற்கொலை சம்பவத்தில் இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

Nagaraj
Last updated: April 10, 2025 4:26 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

தஞ்சாவூா்: தஞ்சாவூர் அருகே காவல் நிலையம் முன்பு விஷம் குடித்து பெண் தற்கொலை சம்பவத்தில் இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள நடுக்காவேரி அரச மரத் தெருவைச் சேர்ந்தவர் அய்யாவு மகன் தினேஷ் (32). இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை முயற்சி உள்பட 13 வழக்குகள் உள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை தனது உறவினர் வீட்டு துக்க நிகழ்வுக்கு செல்வதற்காக இவர் நடுக்காவேரி பஸ் நிறுத்தத்தில் குடும்பத்துடன் நின்று கொண்டிருந்தார்.

அப்போது, இவரை அங்கு வந்த போலீசார் விசாரணைக்கு எனக் கூறி நடுக்காவேரி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இவர்களைப் பின்தொடர்ந்து குடும்பத்தினரும் போலீஸ் நிலையத்துக்குச் சென்றனர்.

பொது இடத்தில் கத்தியைக் காட்டி மிரட்டியதாகக் கூறி வழக்குப் பதிவு செய்து தினேசை கைது செய்தனர்.

தங்கள் அண்ணன் மீது பொய் வழக்கு போடாமல் உடனே விடுவிக்க வேண்டும் எனக் கூறி அவரது தங்கைகள் மேனகா (31), கீர்த்திகா (29) போலீசாரிடம் வலியுறுத்தினர். ஆனால் அவர்களை போலீசார் திட்டி அனுப்பியதாக கூறப்படுகிறது.

இதனால் மனம் உடைந்த மேனகா, கீர்த்திகா ஆகியோர் நடுக்காவேரி போலீஸ் நிலையம் முன்பு விஷம் குடித்து மயங்கி விழுந்தனர். இதனையடுத்து இருவரையும் உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி பொறியியல் பட்டதாரியான கீர்த்திகா நேற்று காலை உயிரிழந்தார். மேனகாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையறிந்த உறவினர்கள் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு திரண்டு சென்று, இந்தச் சம்பவம் தொடர்பாக கோட்டாட்சியர் விசாரணை நடத்தி தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த சம்பவத்திற்கு காரணமான இன்ஸ்பெக்டர் சர்மிளா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை உடலை வாங்க மாட்டோம் எனக்கூறி போராட்டம் நடத்தினர். அவர்களிடம் துணை போலீஸ் பிரண்டு சோமசுந்தரம் மற்றும் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

தொடர்ந்து இன்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உறவினர்கள் திரண்டு உள்ளனர். பாதுகாப்புக்காக அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் இந்த வழக்கை முறையாக விசாரிக்காத நடுக்காவேரி இன்ஸ்பெக்டர் சர்மிளாவை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் கோட்டாட்சியர் விசாரணைக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

You Might Also Like

“நான் CBI இயக்குநர்!” – கலெக்டர் அலுவலகத்தில் போலி அதிகாரி சிக்கினார்

விளையாட்டு வீரர்களின் போராட்டம் பேசும் ‘அங்கீகாரம்’! ஜூன் 26ல் ரிலீஸ்

RTI-க்கு பதில் மறுத்த டாஸ்மாக்! மதுக்கடை எண்ணிக்கை விவகாரத்தில் சர்ச்சை

கொழுப்பை குறைக்க விரும்புபவர்களுக்கு உதவும் பீட்ரூட் ஜூஸ்

தொப்பையை குறைக்க இந்த பானத்தை செய்து அருந்தி பாருங்கள்!!!

TAGGED:ChangeInvestigationissuancemid-cauveryorderWaiting Listஉத்தரவுகாத்திருப்போர் பட்டியல்நடுக்காவேரிபிறப்பிப்புமாற்றம்விசாரணை
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
இந்தியா

பராமரிப்பு பணி எதிரொலி! திருப்பதி – காட்பாடி வழித்தடத்தில் ரெயில்கள் ரத்து

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?