சென்னை: பாடகி கெனிஷா ஃப்ரான்சிஸ் தனது புதிய ஆல்பம் பாடல் “அன்றும் இன்றும்” வெளியீட்டை முன்னிட்டு திரை பிரபலங்களுக்கு விருந்து வழங்கினார். திங்க் மியூசிக் நிறுவனம் வெளியிட்ட இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனை கொண்டாடும் விதமாக கெனிஷா தனது நலம் விரும்பிகளுக்கும் திரையுலக நண்பர்களுக்கும் ஒரு மாலை விருந்தை ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த நிகழ்வில் நடிகர் ரவி மோகன், நடிகர் மாதவன், இசையமைப்பாளர் டி. இமான், இயக்குநர் சுதா கொங்கரா, சொல்லிசைப் பாடகர் தெருக்குரல் அறிவு உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர். கெனிஷா இந்த விருந்தின் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதில், “தங்களது நலம் விரும்பிகளுக்கு சின்ன விருந்து வைத்தோம்” என பதிவிட்டிருந்தார்.
கெனிஷா மற்றும் ரவி மோகனின் நெருக்கம் அவரின் விவாகரத்து விவகாரத்தில் மையக்கருத்தாக பேசப்பட்டது. ஆனால் இருவரும் நல்ல தோழர்கள் எனவும், எதிர்காலத்தில் ஹீலிங் சென்டர் தொடங்க திட்டமிட்டு உள்ளதாகவும் தெளிவுபடுத்தியுள்ளனர். இந்த விவகாரம் அதிகமாக பரவ, கெனிஷா மீது விமர்சனங்கள் குவிந்தன. இதனைக் கண்டித்து, அவதூறு, மிரட்டல்கள் குறித்து கெனிஷா பதிலடி அளித்தார்.
இது தொடர்பான யூடியூப் வீடியோக்கள் அகற்றப்பட்ட நிலையில், தற்போது அந்த விவாதங்கள் அடங்கியுள்ளன. இந்நிலையில் நடத்திய விருந்தில் கெனிஷா மற்றும் ரவி மோகனின் நட்பு மீண்டும் ஒருமுறை வலியுறுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிகழ்வு தமிழ் சினிமா வட்டாரத்தில் மீண்டும் ஒரு புதுச்செய்தியாக பரவி வருகிறது.