By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    லெபனான் – இஸ்ரேல் புதிய போர் நிறுத்தம்; டிரம்ப் அறிவிப்பு
    0 Min Read
    தம்பியை தூக்கிக்கொண்டு பள்ளிக்கு வரும் 14 வயது மாணவி; நெகிழ்ச்சியூட்டும் கதை
    0 Min Read
    அமெரிக்காவில் நேரடி பேச்சுவார்த்தை; இஸ்ரேல் – லெபனான் உறவில் புதிய திருப்பம்
    0 Min Read
    டிரம்பின் ரூ.17,100 கோடி நிதி திட்டம் நிறுத்தம்; சொந்தக் கட்சியினர் எதிர்ப்பு
    1 Min Read
    அமெரிக்காவில் 30 இந்திய லாரி டிரைவர்கள் கைது; நாடு கடத்த நடவடிக்கை
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    கேரளாவின் மிகப்பெரிய சவால் போதைப்பொருள் பரவல்: முதல்வர் சதீசன் கவலை
    0 Min Read
    உச்ச நீதிமன்ற புதிய பெண் நீதிபதியாக மோகனா நியமனம்
    1 Min Read
    கணவர் மீது ஆசிட் வீசிய பெண்ணுக்கு ஆயுள் தண்டனை
    0 Min Read
    மேலும் 114 ரஃபேல் விமானங்கள்: இந்தியாவின் விமானப்படை பலம் அதிகரிப்பு
    1 Min Read
    மே மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.94 லட்சம் கோடியை கடந்தது
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    வீட்டு வரிக்காக லஞ்சம்; மாநகராட்சி ஊழியர் கைது
    1 Min Read
    கேரளாவில் ஜூன் 4ல் தென்மேற்கு பருவமழை துவக்கம்? இந்திய வானிலை ஆய்வு மையம் புதிய தகவல்
    1 Min Read
    தமிழகத்தில் 22 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை
    2 Min Read
    லால்குடியில் விக்கிரம சோழன் கால கல்வெட்டு கண்டெடுப்பு
    1 Min Read
    ஸ்வச்சதா துாய்மை இயக்கத்தை சிறப்பாக செயல்படுத்திய தெற்கு ரயில்வேக்கு விருது
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: நடிகர் திலீப் மீதான வழக்கில் வரும் 8ம் தேதி தீர்ப்பு
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சினிமா > நடிகர் திலீப் மீதான வழக்கில் வரும் 8ம் தேதி தீர்ப்பு
சினிமா

நடிகர் திலீப் மீதான வழக்கில் வரும் 8ம் தேதி தீர்ப்பு

Nagaraj
Last updated: November 26, 2025 7:48 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

கேரளா: நடிகை பலாத்கார வழக்கில் நடிகர் திலீப் மீதான வழக்கில் வரும் டிசம்பர் 8ல் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

மலையாளத் திரையுலகையே உலுக்கிய நடிகை மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கில், பிரபல நடிகர் திலீப் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்த இறுதித் தீர்ப்பை எர்ணாகுளம் நீதிமன்றம் விரைவில் வழங்க உள்ளது. சுமார் ஆறரை ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், வருகிற டிசம்பர் 8 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் கடந்த 2017ம் ஆண்டு கொச்சி நகரில் நடந்தது. அப்போது ஒரு முன்னணி நடிகை காரில் பயணித்துக் கொண்டிருந்தபோது, ஒரு கும்பல் அவரை வழிமறித்து, காருக்குள்ளேயே அவருக்குப் பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. இது குறித்து நடிகை அளித்த புகாரின் பேரில், எர்ணாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.

முதற்கட்ட விசாரணையில், பெரும்பாவூரைச் சேர்ந்த பல்சர் சுனில் என்கிற சுனில் குமார் என்பவர் தலைமையிலான சிலர்தான் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. சுனிலைக் கைது செய்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையின் முடிவில்தான், இந்தப் பாலியல் துன்புறுத்தலின் பின்னணியில் ஒரு பெரிய சதித் திட்டம் இருப்பது வெளிச்சத்துக்கு வந்தது.

இந்தச் சம்பவத்திற்குக் காரணமே, பிரபல மலையாள நடிகர் திலீப் மற்றும் பாதிக்கப்பட்ட நடிகை ஆகியோருக்கு இடையே நிலவி வந்த முன்விரோதம் தான் என்றும், நடிகர் திலீப் சதித் திட்டம் தீட்டியதன் பேரிலேயே இந்தக் கொடூரச் செயல் அரங்கேறியது என்றும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை 10ம் தேதி நடிகர் திலீப்பை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர் அங்கமாலி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் ஆலுவா கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் நடிகர் திலீப் உட்பட மொத்தம் 8 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு விசாரணை 2018ம் ஆண்டு அக்டோபர் 8 ஆம் தேதி எர்ணாகுளம் முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் தொடங்கியது. இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று நடிகர் திலீப் கடந்த 2018 ஆம் ஆண்டு கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். ஆனால், அந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த வழக்கில் முக்கியச் சாட்சிகளிடம் சுமார் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாகத் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், தற்போது தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நடிகையை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய வழக்கில், நடிகர் திலீப் மீதான குற்றச்சாட்டுகளுக்கு வருகிற டிசம்பர் 8 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று எர்ணாகுளம் நீதிமன்றம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த வழக்கில் அளிக்கப்பட உள்ள தீர்ப்பு, மலையாளத் திரையுலகிலும், பொதுமக்களிடையேயும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

You Might Also Like

“சாகும் வரை சினிமாவில் நடிப்பேன்” – நடிகை பிரிகிடா உருக்கம்

ரஜினி – கமல் கூட்டணி மீண்டும்? ‘தலைவர் 173’ படத்தை இயக்கும் அஸ்வத் மாரிமுத்து!

நடிகை சோனாவின் நெகிழ்ச்சியான பிறந்தநாள் கொண்டாட்டம்

நடிகராக அறிமுகமாகும் அபிஷன்; சிவராஜ்குமார் அப்பாவாக நடிப்பு

ஜேசன் சஞ்சயின் ‘சிக்மா’ படத்தின் முதல் பாடல் ஜூன் 4ல் ரிலீஸ்

TAGGED:AnnouncementExpectationMalayalam cinemaOfficialpublicVerdictஅதிகாரப்பூர்வம்அறிவிப்புஎதிர்பார்ப்புதீர்ப்புபொதுமக்கள்மலையாளத் திரையுலம்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
விவசாயம்

தானியங்கள் சேமிப்பில் தகுந்த பாதுகாப்பு முறைகளை கையாள வேண்டும்

By Nagaraj 3 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?