By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    துபாய் விமான நிலையம் அருகே விழுந்த ஈரானின் டிரோன்கள்
    1 Min Read
    ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா காமேனி தேர்வு
    1 Min Read
    தெஹ்ரானில் பற்றி எரிகிறது எண்ணெய் கிடங்கு
    0 Min Read
    போர் தொடரும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டம்
    0 Min Read
    ஈரான் எண்ணெய் கிடங்குகள் மீது சரமாரி தாக்குதலால் பதற்றம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    குழந்தைகளுக்கு இந்த உணவுகளை கொடுக்க மறக்காதீங்க!!
    1 Min Read
    ரெடிமேட் உணவுகளை சாப்பிடும் முன் யோசிங்க!
    1 Min Read
    அதிகளவு உடற்பயிற்சியை அதிக நேரம் செய்பவர்களா நீங்கள்… அப்போ இது உங்களுக்காக!!!
    1 Min Read
    புயல் எச்சரிக்கையை முன்கூட்டியே கண்டறிய ஏஐ தொழில்நுட்பம்… மத்திய அமைச்சர் தகவல்
    1 Min Read
    கொரோனா தடுப்பூசி பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்கணும்… உச்சநீதிமன்றம் உத்தரவு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    மீனாட்சி மருத்துவமனையி நடத்திய ஒற்றுமையை ஊக்குவிக்கும் இப்தார்
    2 Min Read
    உடல் சூட்டை தணிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் பேயன் வாழைப்பழம்!
    2 Min Read
    நுங்கு-ல் உள்ள மருத்துவக்குணங்கள்… இனி இதுதான் நமக்கு தேவை!!!
    1 Min Read
    உங்களின் கம்பீரத்தை உயர்த்த சரியான ஆடைகளை அணியுங்கள்…
    1 Min Read
    கால்களுக்கு இயற்கை அழகு தரும் கொலுசு… எப்படி எடுப்பது?
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: ஜனநாயகன் ரிலீஸ்… சென்சார் வழக்கின் தீர்ப்பு நாளைக்கு ஒத்தி வைப்பு
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சினிமா > ஜனநாயகன் ரிலீஸ்… சென்சார் வழக்கின் தீர்ப்பு நாளைக்கு ஒத்தி வைப்பு
சினிமா

ஜனநாயகன் ரிலீஸ்… சென்சார் வழக்கின் தீர்ப்பு நாளைக்கு ஒத்தி வைப்பு

Nagaraj
Last updated: January 7, 2026 6:32 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சென்னை: ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆகுமா? – சென்சார் வழக்கின் தீர்ப்பு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் பெரும் கேள்விக்குறி எழுந்துள்ளது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்தப்படம் ஜன நாயகன். இப்படம் பொங்கலை முன்னிட்டு ஜன.9 திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ஆனால், இதுவரை படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதனைத்தொடர்ந்து படத்திற்கு சான்றிதழ் வழங்க மத்திய தணிக்கை வாரியத்திற்கு உத்தரவிடக் கோரி பட தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ் உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர்ந்தது.

நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது பட தயாரிப்பு நிர்வாகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “பரிந்துரைத்த மாற்றங்களை செய்தால், ‘U/A சான்றிதழ் வழங்குகிறோம் எனக் கூறினார்கள். அதனடிப்படையில் தணிக்கை வாரியம் கூறிய அனைத்து திருத்தங்களும் செய்யப்பட்டது. அதனை கண்காணிப்பு அதிகாரியும் உறுதி செய்தார். ஆனால் படத்தில் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் காட்சிகள் உள்ளதாக யாரோ ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் இதுவரை சான்றிதழ் வழங்கப்படவில்லை” என்று வாதம் வைத்தார்.

மேலும், “யாருமே இன்னும் படத்தை பார்க்காத நிலையில் சிலர் படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். யார் வேண்டுமானாலும் படத்திற்கு எதிராக புகார் அளிக்கலாம் என்ற பிரிவு நீக்கப்பட்டுள்ளது. ரூ.500 கோடி முதலீடு செய்யபட்டுள்ள நிலையில் யாரோ ஒருவர் அளித்த புகாரின்பேரில் இன்னும் சான்றிதழ் வழங்கமால் இருக்கிறார்கள்.” என தயாரிப்பு நிறுவனம் வாதங்களை முன்வைத்தது.

இதனைத்தொடர்ந்து குறிப்பிட்ட காலத்திற்குள் சான்றிதழ் வழங்க வேண்டுமென மனுதாரர் கோரமுடியாது என தணிக்கை வாரியம் தெரிவித்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பி.டி. ஆஷா, ஜனநாயகன் படத்திற்கு எதிராக தொடரப்பட்ட புகாரை நாளை தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய தணிக்கை வாரியத்திற்கு உத்தரவிட்டார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, படம் பார்த்த தணிக்கை குழு உறுப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில் மறு ஆய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது என்று சென்சார் போர்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. படத்துக்கு யு/ ஏ சான்று வழங்க முடிவு செய்த பின் மறு ஆய்வுக்கு அனுப்பியது ஏன்? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

நீதிபதி கேள்விக்கு பதில் அளித்த சென்சார் போர்டு வழக்கறிஞர், “ஜனநாயகன் படத்தில் ராணுவப் படைகளின் இலச்சினை பயன்படுத்தப்பட்டுள்ளதால், அத்துறை நிபுணரிடம் ஆலோசனை பெற்றிருக்க வேண்டும். சென்சார் பரிசீலனைக் குழுவில் இடம்பெறாத உறுப்பினர்களைக் கொண்ட ஒரு புதிய குழுவால் ஜனநாயகன் படம் மறுபடியும் பார்க்கப்பட வேண்டும்

ஒரு திரைப்படத்தை தணிக்கை குழு பார்வையிட்ட பிறகும், அதனை மறுதணிக்கைக்கு உத்தரவிட தணிக்கை குழு தலைவருக்கு அதிகாரம் உண்டு. மறுதணிக்கை குறித்து தயாரிப்பு நிறுவனத்திற்கு தகவல் அனுப்பினோம். 14 காட்சிகளை நீக்க ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்டது. நாளை மறுதினம் படம் ரிலீஸ் எனக்கூறி சென்சார் சான்று கேட்க முடியாது

பின்னர் பேசிய நீதிபதி, “விதிகளின் அடிப்படையில் பரிசீலித்து முடிவெடுக்க மட்டுமே சென்சார் போர்டுக்கு உத்தரவிட முடியும். தணிக்கை வாரியத்தின் Timeline-ஐ பின்பற்றித்தான் ஆக வேண்டும்” என்று தெரிவித்தார்.

இதனையடுத்து, ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க கோரிய வழக்கின் தீர்ப்பை, நாளை காலை ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்றம். இதனால் திட்டமிட்டபடி ஜனநாயகன் படம் வெளியாவதில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

You Might Also Like

கண்டென்ட் மட்டுமே கிங்… நடிகை ராதிகா நெகிழ்ச்சி

நடிகை ஹன்சிகாவிற்கு விவாகரத்து அளித்த மும்பை கோர்ட்

தான் தயாரிக்கும் அடுத்த படத்தின் இயக்குனரை அறிமுகம் செய்த சிவகார்த்திகேயன்

10 நாட்களில் அட்டகாச வசூல் வேட்டை நடத்தியுள்ள தாய் கிழவி படம்

திருச்செந்தூரில் முருகனை தரிசனம் செய்த நடிகை கோமலி பிரசாத்

TAGGED:Actor VijayChennaiCourtJanyayanproblemTrialகோர்ட்சிக்கல்சென்னைநடிகர் விஜய்விசாரணைஜனநாயகன்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
தமிழகம்

மீனாட்சி மருத்துவமனையி நடத்திய ஒற்றுமையை ஊக்குவிக்கும் இப்தார்

By Nagaraj 2 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?