ஈரோடு: தேர்தல் பணிக்கு செல்லும் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிப்.5ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பணிக்குச் செல்லும் 24 வாகனங்களில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாகனங்கள் செல்லும் இடங்களை தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.