By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    “ஐரோப்பிய ஆயுதங்களே இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தப்படுகின்றன” – ஜெய்சங்கர்
    1 Min Read
    “அமைதி ஒப்பந்தம் இல்லை!” – டிரம்ப் அறிவிப்பை மறுத்த ஈரான்
    1 Min Read
    அமெரிக்க தாக்குதலுக்குப் பதிலடியாக ஹார்முஸ் நீரிணையை மூடியது ஈரான்
    2 Min Read
    அமெரிக்கா – ஈரான் மோதல் தீவிரம்! அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
    1 Min Read
    பிரதமர் மோடிக்கு டிரம்ப் பாராட்டு! “மாபெரும் தலைவர்” என வாழ்த்து
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    பராமரிப்பு பணி எதிரொலி! திருப்பதி – காட்பாடி வழித்தடத்தில் ரெயில்கள் ரத்து
    1 Min Read
    CBSE மறுமதிப்பீட்டு அவகாசம் நீட்டிக்க முடியாது! டெல்லி ஐகோர்ட் அதிரடி
    1 Min Read
    இந்திய மாலுமிகள் பயணிக்கும் கப்பல் மீது மீண்டும் தாக்குதல்! அமெரிக்காவுக்கு இந்தியா கண்டனம்
    1 Min Read
    புற்றுநோய் மருந்துகளின் விலை உயர்வு! மத்திய அரசு ஒப்புதல்
    1 Min Read
    நீட் மறுதேர்வுக்கு கடும் பாதுகாப்பு! விமானப்படை உதவியுடன் வினாத்தாள் விநியோகம்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    “நான் CBI இயக்குநர்!” – கலெக்டர் அலுவலகத்தில் போலி அதிகாரி சிக்கினார்
    1 Min Read
    விளையாட்டு வீரர்களின் போராட்டம் பேசும் ‘அங்கீகாரம்’! ஜூன் 26ல் ரிலீஸ்
    1 Min Read
    RTI-க்கு பதில் மறுத்த டாஸ்மாக்! மதுக்கடை எண்ணிக்கை விவகாரத்தில் சர்ச்சை
    1 Min Read
    கொழுப்பை குறைக்க விரும்புபவர்களுக்கு உதவும் பீட்ரூட் ஜூஸ்
    1 Min Read
    தொப்பையை குறைக்க இந்த பானத்தை செய்து அருந்தி பாருங்கள்!!!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: பழமை வாய்ந்த தர்மசம்வர்த்தினி சமேத நாமபுரீஸ்வரர் கோயில்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > ஆன்மீகம் > பழமை வாய்ந்த தர்மசம்வர்த்தினி சமேத நாமபுரீஸ்வரர் கோயில்
ஆன்மீகம்

பழமை வாய்ந்த தர்மசம்வர்த்தினி சமேத நாமபுரீஸ்வரர் கோயில்

Nagaraj
Last updated: March 3, 2025 6:18 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

புதுக்கோட்டை :புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அமைந்துள்ளது 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த தர்மசம்வர்த்தினி சமேத நாமபுரீஸ்வரர் கோயில். இக்கோயில் 1305 –ம் ஆண்டில் சுந்தர பாண்டியன் காலத்தில் கட்டப்பட்டதாகும். இந்த சிவன் கோயிலில் 35 கல்வெட்டுகள் உள்ளன. சோழ மன்னராலும். பாண்டிய மன்னராலும் சமரசம் செய்து கொண்டு கட்டப்பட்டு இருக்க வேண்டும்.

இங்கு சோழர் கால, பாண்டியர் கால கல் தூண்கள் இணைந்தே காணப்படுகிறது. காசி புராணத்தில் இக்கோயில் பற்றிய செய்திகள் இருப்பதாக கல்வெட்டு ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு எடுத்துக்காட்டாக இக்கோயிலில் தலவிருட்சமாக காசி வில்வம் விளங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த ஆலங்குடியின் பழைய பெயர் கிடாரம் கொண்ட சோழபுரம் என்றும், மற்றொரு பெயர் பேரூர் ஆண்டான் என்றும் அழைக்கப்பட்டு இருப்பதாக கல்வெட்டு வாயிலாக தெரிய வருகிறது. இக்கோயிலில் குரு தெட்சிணாமூர்த்தி தனிக்கோயில் கொண்டு உள்ளார். ரிஷபத்தோடும் நான்கு ரிஷிகளுக்கு பதிலாக இரண்டு ரிஷிகளாக முயலகனோடு அருள்பாளிக்கிறார். இவர் மேதா தெட்சிணாமூர்த்தியாக அமைந்திருப்பதால் இரண்டாவது குருஸ்தலமாக விளங்குகிறது. இதை உறுதி செய்யும் பொருட்டு குரு பசுவானுக்கு உரிய தானியமான கடலை ஆலங்குடி தாலுகாவில் பயிரிடப்பட்டு இந்திய அளவில் கடலைக்கு புகழ் பெற்ற வட்டாரமாக திகழ்கிறது.

இங்கு லிங்கோத்பவர் ஸ்தானத்தில் மகாவிஷ்ணுவுக்கும், ஆஞ்சநேயருக்கும் தனிகோயிலும். அதன் எதிர்புறம் மகாலெட்சுமி சன்னதியும் தனிக்கோயிலாக இருப்பது சிறப்புக்குரியதாகும். இக்கோயிலில் வழிபட்டால் சிவனையும், விஷ்ணுவையும் வணங்கிய பயன் கிடைக்கிறது என்பது பக்தர்களின் நம்பிக்கை. இக்கோயிலில் சனி பிரதோஷத்தைவிட புதன்கிழமை வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பானது. பிரதோஷ காலத்தில் வழிபடும்போது மகா விஷ்ணு, பிரம்மா ஆகியோரை தரிசிக்கலாம். புதனுக்கும். சனீஸ்வரனுக்கும் அதிதேவதையாக மகாவிஷ்ணு அமைந்துள்ளதால் சிவனையும், விஷ்ணுவையும் வணங்கினால் சனி கிரக, புதன் கிரகதோஷங்கள் நீங்கப்பெறுகிறது.

இங்கு உள்ள நந்திகேஸ்வரருக்கும் எங்கும் காணப்படாத வண்ணம் அரிதாக நெற்றியில் திருநாமம் இருப்பதால் இங்கு உள்ள சிவபெருமானுக்கு நாமபுரீஸ்வரர் என்ற பெயர் விளங்குகிறது. இக்கோயிலில் காலபைரவர், சூரியன், குழந்தை வடிவாக பால சனீஸ்வரர் தனித்தனியாக கோயில் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். சனி பகவானுடைய தந்தையான சூரிய பகவான் அருகிலும், காலபைரவரும் அருள்பாலித்து வருகின்றனர். தேய்பிறை அஷ்டமி தினத்தன்று மூவரையும் வழிபட்டால் அனைத்துவிதமான பலன்களையும் கிடைக்கும் என்பதும் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

இங்கு மற்றொரு விசேஷம் ஆண்டுதோறும் மார்கழி மாதம் 10-ம் தேதி வரை அதிகாலை 6.30 மணிக்குமேல் 6.45 மணிக்குள் சூரியபகவான் தன்னுடைய ஒளிக்கதிர்களால் சிவபெருமானை சிவபூஜை செய்கின்ற அற்புதகாட்சியை தரிசிக்கலாம். மூன்று நிமிடமே இந்த நிகழ்வை காணலாம். இக்கோயிலில் திருமண நிச்சயதார்த்தம், திருமணங்கள் இறைவன் சன்னிதானத்தில் நடந்து வருகிறது.

You Might Also Like

கங்கையம்மன் கோவில் தீமிதி திருவிழா: பக்தர்கள் நேர்த்திக்கடன்

மான்பூண்டி நல்லாண்டவர் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்

302 மண் புரவிகளுடன் கோலாகலமாக நடைபெற்ற சூரக்குடி புரவி எடுப்பு விழா

ஆனி மாத பூஜைக்காக ஜூன் 14-ல் திறக்கப்படுகிறது சபரிமலை அய்யப்பன் கோவில்

விருத்தாசலம் ராஜகோபால சுவாமி கோவிலில் கோலாகல தேரோட்டம்

TAGGED:Kasi VilvammarriageNamapureeswararPilgrims HopePudukkottaiகாசி வில்வம்திருமணம்நாமபுரீஸ்வரர்பக்தர்கள் நம்பிக்கைபுதுக்கோட்டை
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
இந்தியா

பராமரிப்பு பணி எதிரொலி! திருப்பதி – காட்பாடி வழித்தடத்தில் ரெயில்கள் ரத்து

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?