By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    “ஐரோப்பிய ஆயுதங்களே இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தப்படுகின்றன” – ஜெய்சங்கர்
    1 Min Read
    “அமைதி ஒப்பந்தம் இல்லை!” – டிரம்ப் அறிவிப்பை மறுத்த ஈரான்
    1 Min Read
    அமெரிக்க தாக்குதலுக்குப் பதிலடியாக ஹார்முஸ் நீரிணையை மூடியது ஈரான்
    2 Min Read
    அமெரிக்கா – ஈரான் மோதல் தீவிரம்! அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
    1 Min Read
    பிரதமர் மோடிக்கு டிரம்ப் பாராட்டு! “மாபெரும் தலைவர்” என வாழ்த்து
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    பராமரிப்பு பணி எதிரொலி! திருப்பதி – காட்பாடி வழித்தடத்தில் ரெயில்கள் ரத்து
    1 Min Read
    CBSE மறுமதிப்பீட்டு அவகாசம் நீட்டிக்க முடியாது! டெல்லி ஐகோர்ட் அதிரடி
    1 Min Read
    இந்திய மாலுமிகள் பயணிக்கும் கப்பல் மீது மீண்டும் தாக்குதல்! அமெரிக்காவுக்கு இந்தியா கண்டனம்
    1 Min Read
    புற்றுநோய் மருந்துகளின் விலை உயர்வு! மத்திய அரசு ஒப்புதல்
    1 Min Read
    நீட் மறுதேர்வுக்கு கடும் பாதுகாப்பு! விமானப்படை உதவியுடன் வினாத்தாள் விநியோகம்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    “நான் CBI இயக்குநர்!” – கலெக்டர் அலுவலகத்தில் போலி அதிகாரி சிக்கினார்
    1 Min Read
    விளையாட்டு வீரர்களின் போராட்டம் பேசும் ‘அங்கீகாரம்’! ஜூன் 26ல் ரிலீஸ்
    1 Min Read
    RTI-க்கு பதில் மறுத்த டாஸ்மாக்! மதுக்கடை எண்ணிக்கை விவகாரத்தில் சர்ச்சை
    1 Min Read
    கொழுப்பை குறைக்க விரும்புபவர்களுக்கு உதவும் பீட்ரூட் ஜூஸ்
    1 Min Read
    தொப்பையை குறைக்க இந்த பானத்தை செய்து அருந்தி பாருங்கள்!!!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: புராண – புராதனப் பெருமைகள் கொண்ட கஞ்சனூர் அக்னீஸ்வரர் தலம்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > ஆன்மீகம் > புராண – புராதனப் பெருமைகள் கொண்ட கஞ்சனூர் அக்னீஸ்வரர் தலம்
ஆன்மீகம்

புராண – புராதனப் பெருமைகள் கொண்ட கஞ்சனூர் அக்னீஸ்வரர் தலம்

Nagaraj
Last updated: April 21, 2026 4:43 pm
By Nagaraj 2 Min Read
Share
oplus_2
SHARE

கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து 18 கி.மீ. தொலைவிலும் ஆடுதுறையில் இருந்து சூரியனார்கோயிலுக்கு அருகிலும் அமைந்துள்ளது கஞ்சனூர் அக்னீஸ்வரர் திருத்தலம். பாடல் பெற்ற திருத்தலங்களில் இது 36வது திருத்தலம் என்று போற்றப்படுகிறது.

புனிதத் தலங்களில் மிக முக்கியமாகக் கருதப்படும் கோயில்களில் இதுவும் ஒன்று. பக்தர்கள் அதிக அளவில் வருகை தந்து தரிசனம் செய்கிறார்கள். கஞ்சம் என்றால் தாமரையில் இருப்பவன் என்று பொருள். அதாவது பிரம்ம தேவன் வழிபட்ட தலமாதலால் இத்தலத்திற்கு கஞ்சனூர் என்று பெயர் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

புராண – புராதனப் பெருமைகள் கொண்ட திருத்தலம் இது. கஞ்சனூர் என்றும் கஞ்சனூர் சதுர்வேதி மங்கலம், நல்லாற்றுக் கஞ்சனூர், நாட்டுக் கஞ்சனூர் என்றெல்லாம் புராணமும் சரித்திரமும் சொல்லுகிற திருத்தலம் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.

புலாசவனம், பராசரபுரம், கம்ஸபுரம், அக்னிபுரம், மோட்சபுரம் என்றெல்லாம் புராணம் இந்தத் தலத்தை விவரித்துள்ளது. கம்சன் வழிபட்ட திருத்தலம் கம்சனூர் எனப்பட்டு பின்னாளில் கஞ்சனூர் என மருவியதாகச் சொல்கிறது ஸ்தல புராணம்.

இத்திருத்தலத்தின் இறைவன் ஸ்ரீஅக்னீஸ்வரர். முக்தி தரும் தலம் என்றும் மோட்சத்தை அடைய அருள்பாலிக்கும் தலம் என்றும் போற்றப்படுகிறது. இந்தத் தலமானது சுக்கிர திருத்தலம் எனப்படுகிறது.

தேவாரம் பாடிய திருத்தலம் எனும் பெருமையும் கஞ்சனூருக்கு உண்டு. நவக்கிரகங்களில் சுக்கிர பகவானுக்கு உரிய தலம். இந்த தலத்து இறைவனை திருநாவுக்கரசரின் தேவாரப் பாடலைப் பாடி மனதார வேண்டிக்கொண்டால், மங்கல காரியங்கள் நடைபெறும். மங்காத செல்வம் கிடைக்கப் பெறலாம். சிவபெருமான் அருகே அம்பிகை கற்பக நாயகி திருநாமத்துடன் அருள்புரிகிறார். சுவாமியும் அம்பாளும் கிழக்கு நோக்கி ஒரே திசையில் காட்சி தருகிறார்கள். இவ்விருவருக்கும் இடையில் சுப்பிரமணியர் சன்னதி அமைந்துள்ளது. இத்தகைய காட்சி சோமாஸ்கந்த தரிசனம் என்று அழைக்கப்படுகிறது.

ஹரதத்த சிவாச்சாரியார் தீயில் பழுக்கக் காய்ச்சிய பீடத்தின் மீது அமர்ந்து சைவ சமயத்தின் மேன்மையை உலகிற்கு உணர்த்திய தலம் இந்த கஞ்சனூர். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான மானக்கஞ்சாற நாயனார் முக்தி அடைந்த திருத்தலம் இது.

சிவனை வருடம் தொடங்கும் பொழுது வந்து வழிபடுவது சிறப்பான ஒன்றாக இப்பகுதி மக்கள் கருதுகிறார்கள். இந்த கோயில் வெள்ளி அதாவது சுக்கிரன் கிரகத்தை வழிபடுவதற்கான முக்கிய தலமாக விளங்குகிறது. காவிரி டெல்டா மாகாணத்தில் புகழ்பெற்ற 9 நவக்கிரக கோயில்களில் இதுவும் ஒன்று. பராசரருக்கு சித்தப்பிரமை நீங்கியது, பிரம்மனுக்குத் திருமண காட்சி கொடுத்தது, அக்னி பகவானுக்கு உண்டான சோகை நோயைத் தீர்த்தது, சந்திரனின் சாபம் தீர்த்தது, கம்சன் என்னும் மன்னனின் உடற்பிணி நீங்கியது, கலிக்காமருக்குத் திருமணம் நடந்தது, மானக்கஞ்சாறர் அவதரித்தது எனப் பல சிறப்புகளை உடையது இத்தலம். ஒரு முறை சுக்கிராச்சாரியாரால் விஷ்ணு பகவானுக்குச் சுக்கிர தோஷம் ஏற்பட்டு விட்டது அந்த தோஷத்தை நீக்க விஷ்ணு ஹரதத்தர் என்ற திருநாமத்துடன் இந்த கஞ்சனூரில் வந்து சிவபெருமானை வழிபட்டு தோஷம் நீங்கப் பெற்றார் என்கிறது புராணம்.

சுக்கிர தோஷம் உள்ளவர்கள் இத்தலத்தில் உள்ள சுக்கிரனுக்கும் அருகில் உள்ள ஐம்பொன்னால் ஆன சிவபெருமானுக்கும் வழிபாடு செய்வது சிறப்பாகும்.

You Might Also Like

கங்கையம்மன் கோவில் தீமிதி திருவிழா: பக்தர்கள் நேர்த்திக்கடன்

மான்பூண்டி நல்லாண்டவர் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்

302 மண் புரவிகளுடன் கோலாகலமாக நடைபெற்ற சூரக்குடி புரவி எடுப்பு விழா

ஆனி மாத பூஜைக்காக ஜூன் 14-ல் திறக்கப்படுகிறது சபரிமலை அய்யப்பன் கோவில்

விருத்தாசலம் ராஜகோபால சுவாமி கோவிலில் கோலாகல தேரோட்டம்

TAGGED:Cauvery DeltaKanchanurLord ShivaThirunamamVenus Doshaகஞ்சனூர்காவிரி டெல்டாசிவபெருமான்சுக்கிர தோஷம்திருநாமம்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
இந்தியா

பராமரிப்பு பணி எதிரொலி! திருப்பதி – காட்பாடி வழித்தடத்தில் ரெயில்கள் ரத்து

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?