சென்னை: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அல்வா அனைவருக்கும் பிடித்த ஒரு உணவு வகை. இந்த பதிவில் பாதாம் அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பாதாம் – 100 கிராம்
தண்ணீர் – 300 மில்லி
பால் – 200 மில்லி
நெய் – 50 கிராம்.
டீஸயர் (சக்கரைக்கு மாற்று) – 75 கிராம்.
குங்குமப்பூ – சிறிதளவு
ஏலக்காய் தூள் – 10 கிராம்.
செய்முறை: சுடு தண்ணீரில் பாதாமை ஊறவையுங்கள். பின்பு பாதாமை குளிர்ந்த தண்ணீரால் அலசுங்கள். பாதாமுடைய தோலை உரித்த பின் குறைந்தபட்சம் 5 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவையுங்கள்.
பாதாமையும் பாலையும் சேர்த்து நன்கு அரைக்கவும். பின்பு மிதமான சூட்டில் நெய்யை வாணலியில் சுடவைக்கவும். நெய் சூடானதும், பாதாம் கலவையை போட்டுச் மைக்கவும், தொடர்ந்து கிளறி கொண்டேயிருக்கவும்.
பாலினுடைய ஈரப்பதம் ஆவியாகும் வரை சமையுங்கள், பின்பு அதில் டீஸயர், குங்குமப்பூவை அதில் சேர்த்து தொடர்ந்து கிளறி கொண்டேயிருங்கள். வாணலியில் அல்வா ஒட்டாமல் நெய் வெளியில் வரும் வரை கிளறி ஏலக்காய், தேவையான நட்ஸ் போன்றவற்றைச் சேர்த்து இறக்கினால் பாதாம் அல்வா தயார்.
