By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    “ஐரோப்பிய ஆயுதங்களே இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தப்படுகின்றன” – ஜெய்சங்கர்
    1 Min Read
    “அமைதி ஒப்பந்தம் இல்லை!” – டிரம்ப் அறிவிப்பை மறுத்த ஈரான்
    1 Min Read
    அமெரிக்க தாக்குதலுக்குப் பதிலடியாக ஹார்முஸ் நீரிணையை மூடியது ஈரான்
    2 Min Read
    அமெரிக்கா – ஈரான் மோதல் தீவிரம்! அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
    1 Min Read
    பிரதமர் மோடிக்கு டிரம்ப் பாராட்டு! “மாபெரும் தலைவர்” என வாழ்த்து
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    பராமரிப்பு பணி எதிரொலி! திருப்பதி – காட்பாடி வழித்தடத்தில் ரெயில்கள் ரத்து
    1 Min Read
    CBSE மறுமதிப்பீட்டு அவகாசம் நீட்டிக்க முடியாது! டெல்லி ஐகோர்ட் அதிரடி
    1 Min Read
    இந்திய மாலுமிகள் பயணிக்கும் கப்பல் மீது மீண்டும் தாக்குதல்! அமெரிக்காவுக்கு இந்தியா கண்டனம்
    1 Min Read
    புற்றுநோய் மருந்துகளின் விலை உயர்வு! மத்திய அரசு ஒப்புதல்
    1 Min Read
    நீட் மறுதேர்வுக்கு கடும் பாதுகாப்பு! விமானப்படை உதவியுடன் வினாத்தாள் விநியோகம்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    “நான் CBI இயக்குநர்!” – கலெக்டர் அலுவலகத்தில் போலி அதிகாரி சிக்கினார்
    1 Min Read
    விளையாட்டு வீரர்களின் போராட்டம் பேசும் ‘அங்கீகாரம்’! ஜூன் 26ல் ரிலீஸ்
    1 Min Read
    RTI-க்கு பதில் மறுத்த டாஸ்மாக்! மதுக்கடை எண்ணிக்கை விவகாரத்தில் சர்ச்சை
    1 Min Read
    கொழுப்பை குறைக்க விரும்புபவர்களுக்கு உதவும் பீட்ரூட் ஜூஸ்
    1 Min Read
    தொப்பையை குறைக்க இந்த பானத்தை செய்து அருந்தி பாருங்கள்!!!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: யாருக்கு கொடுப்பது… நிர்வாகிகளுடன் 2ம் நாளாக எடப்பாடியார் ஆலோசனை
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > அரசியல் செய்திகள் > யாருக்கு கொடுப்பது… நிர்வாகிகளுடன் 2ம் நாளாக எடப்பாடியார் ஆலோசனை
அரசியல் செய்திகள்

யாருக்கு கொடுப்பது… நிர்வாகிகளுடன் 2ம் நாளாக எடப்பாடியார் ஆலோசனை

Nagaraj
Last updated: May 30, 2025 4:12 pm
By Nagaraj 3 Min Read
Share
SHARE

சென்னை: மாநிலங்களவை 2 சீட் யாருக்கு? என்பது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 2-வது நாளாக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட மாநிலங்களவை எம்.பி.க்களாக ம.தி.மு.க.வை சேர்ந்த வைகோ, தி.மு.க.வை சேர்ந்த வில்சன், சண்முகம், முகமது அப்துல்லா, பா.ம.க.வின் அன்புமணி ராமதாஸ், அ.தி.மு.க.வின் சந்திரசேகர் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வருகிற ஜூலை மாதம் முடிகிறது. எனவே அதற்கான தேர்தல், வருகிற 19-ந்தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் ஒரு எம்.பி. வெற்றி பெற வேண்டுமென்றால் 34 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை. அந்த அடிப்படையில் தி.மு.க.விற்கு 4-ம், அ.தி.மு.க.விற்கு 2 இடங்களும் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

அதன்படி தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களாக வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம் ஆகிய 3 பேர் அறிவிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள ஒரு இடம், மக்கள் நீதி மய்யத்திற்கு தி.மு.க. ஒதுக்கி உள்ளது. அதில் கமல்ஹாசன் போட்டியிடுவார் என்றும் அந்த கட்சி அறிவித்துள்ளது. எனவே இந்த முறை வைகோவிற்கு எம்.பி. பதவி கிடைக்கவில்லை.

மேலும் அ.தி.மு.க. சார்பாக வேட்பாளர்கள் யார்? என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் அதன் கூட்டணி கட்சியான தே.மு.தி.க.வும், முன்பு கூட்டணியில் இருந்த பா.ம.க.வும் தங்களுக்கு ஒரு எம்.பி. ‘சீட்’ வேண்டும் என்று அ.தி.மு.க.விற்கு நெருக்கடி தருகின்றனர்.

அதாவது கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தனித்து இருந்த போது தே.மு.தி.க. தான் அந்த கட்சியுடன் கூட்டணி வைத்தது. அப்போது தே.மு.தி.க.விற்கு ஒரு மாநிலங்களவை எம்.பி. வழங்குவதாக பேசப்பட்டது என்றும், அதன்படி தங்களுக்கு ஒரு எம்.பி. பதவி தரவேண்டும் என்று தே.மு.தி.க. பொது செயலாளர் பிரேமலதா கூறி வருகிறார். ஆனால் அதனை ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி மறுத்து விட்டார். அப்படி எந்த ஒப்பந்தமும் போடவில்லை என்றும் அவர் திட்டவட்டமாக கூறி விட்டார்.

மேலும் தற்போதைய நிலையில் அ.தி.மு.க.விற்கு 62, ஒ.பன்னீர் செல்வம் அணியில் 4 பேர் என மொத்தம் 66 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை மூலம் அ.தி.மு.க.விற்கு ஒரு எம்.பி. உறுதியாக கிடைக்கும். மற்றொரு எம்.பி. வேண்டும் என்றால் மேலும் 2 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை. தற்போது அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா இருப்பதால், அவர்களது 4 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கிடைக்கும். எனவே இரண்டாவது எம்.பி.யும் அ.தி.மு.க.வுக்கு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.அந்த அடிப்படையில் பா.ஜனதா கட்சி பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புமணி ராமதாசுக்கு ஒரு எம்.பி. பதவி கொடுத்து அவரை தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் கொண்டு வரலாம் என்று கூறுகிறது.

ஆனால் இந்த 2 கட்சிக்கும் எம்.பி. சீட்டு தர வேண்டாம் என்ற முடிவில் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக கூறப்படுகிறது. ஏனென்றால் ஒருவருக்கு கொடுத்து மற்றொருவரிடம் பகையாக அவர் விரும்பவில்லை. அதே நேரம் 2 இடங்களுக்கும் அ.தி.மு.க. வேட்பாளர்களையே நிறுத்தினாலும், அது யார் என்பதும் அ.தி.மு.க.வில் பெரும் விவாத பொருளாக மாறி இருக்கிறது. யூகத்தின் அடிப்படையில் பல பெயர்கள் சொல்லப்படுகிறது. இதனாலும் இந்த விஷயத்தில் அ.தி.மு.க. தொடர்ந்து மவுனம் காத்து வருகிறது.

இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் 2-வது நாளாக இன்று 41 மாவட்ட செயலாளர்களை தனித்தனியே சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். மாநிலங்களவை 2 சீட் யாருக்கு வழங்கலாம், அதிமுக சார்பில் மாநிலங்களவை தேர்தலில் களமிறங்கப்போவது யார்? பேரவை தேர்தல், கட்சி வளர்ச்சிப்பணிகள் குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். திமுக ஆட்சிக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாகவும் ஸ்டாலின், உதயநிதிக்கு எதிரான விமர்சனங்களை மக்களிடம் கொண்டு செல்ல நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் விஜய் தொடர்பாக பேச அதிமுக-வினருக்கு அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தடை விதித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பாஜகவோடு திமுகவை தொடர்புபடுத்தும் வகையிலான கதையாடலை கொண்டுள்ள அதிமுக வியூகம் வகுத்துள்ளதாகவும் அதிமுக நிச்சயம் மெகா கூட்டணி அமைக்கும். நம்பிக்கையோடு செயலாற்றுங்கள் என்று பழனிசாமி பேசியதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

You Might Also Like

“18 மணி நேர மின்சாரத்தை எப்படி நம்புவது?” – தினகரன் கேள்வி

‘ஏ’ பிளஸ் ரவுடிக்கு காங்கிரஸில் மாநில துணைத் தலைவர் பதவி? பரபரப்பு

பட்டா மனுக்களுக்கு 15 நாட்களில் தீர்வு! அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

ரூ.134 கோடி சிறப்புத் தொகுப்பு ஏமாற்று நடவடிக்கை? எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

முன்னாள் அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்

TAGGED:ActionAdministratorsAdviceDMK ruleEdappadi PalaniswamiRajya Sabha MPஆலோசனைஎடப்பாடி பழனிசாமிதிமுக ஆட்சிநடவடிக்கைநிர்வாகிகள்மாநிலங்களவை எம்.பி.
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
இந்தியா

பராமரிப்பு பணி எதிரொலி! திருப்பதி – காட்பாடி வழித்தடத்தில் ரெயில்கள் ரத்து

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?